தொகுப்பாளர் நானி தொகுத்து வழங்கி வரும் தெலுங்கு பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி, தமிழ் பிக்பாஸ் இரண்டாவது சீசன் துவங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன் தான் துவங்கியது.

தெலுங்கு பிரபலங்களுக்கு வித்தியாசமான டாஸ்குகள் கொடுத்து இந்த நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக கொண்டு செல்கிறார்கள் நிகழ்ச்சியாளர்கள். 

இந்நிலையில் இவர்களுக்கு சென்ற வாரம் இறுதியில் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அது பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களில் யார் தங்களின், நெருங்கிய நண்பர் என ஒரு கார்டில் எழுதவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. 

மேலும் அவர்கள் சரியான காரணத்தை கூறி 20க்கு மதிப்பெண் கொடுக்கவேண்டும் என்றும் கூறப்பட்டது. 

இந்த டாஸ்கில் நடிகர் கிரீட்டி தன் நெருங்கிய நண்பர் என பாபுவின் பெயரை குறிப்பிட்டு அவருக்கு 20/20 மதிப்பெண் கொடுத்திருந்தார்.

அதை படித்த நானி பாபு கிரீட்டிக்கு 20 கிஸ் கொடுக்கவேண்டும் என தண்டனை கொடுத்தார். அதற்காக அவர் கிரீட்டியின் கையில் நச்சு நச்சுனு 20 முத்தங்கள் கொடுத்து இந்த டாஸ்கை நிறைவு செய்தார்.