தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்த நடிகர் மற்றும் , எழுத்தாளர், இயக்குனர் என பல முகம் கொண்ட கிரிஷ் கர்னாட், இன்று நடைபெற்ற சினிமா விழாவிற்கு விமானநிலையத்தில் இருந்து செல்லும் போது .

டபோலிம் என்கிற நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில் சிக்கியுள்ளார்.

இதில் அவரது இடது கை முழுவதும் நசுங்கியது, இதனால் நடைபெற இருந்த சினிமா விழா உடனடியாக ரத்து செய்யப்பட்டது.

தற்போது கிரிஷ் கர்னாட் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இவர் தமிழில் ரட்ஷகன், காதலன் போன்ற பல படங்களில் தன்னுடைய வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியவர் என்பது குறிப்பிடதக்கது.