Actor Dilip removal from kerala actors and producer association
நடிகை பாவனா பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைதான மலையாள நடிகர் திலீப்-ஐ கேரள நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து அதிரடியாக நீக்கினர்.
நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து நடிகர் திலீப் நேற்று காலை கொச்சி அங்கமாலியிலுள்ள நீதிபதி முன்பு சமர்ப்பிக்கப்பட்டார். நீதிபதி முன்னிலையில் திலீப் சமர்ப்பிக்கப்பட்டபோது பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மக்களும் அதிகளவில் கூடியிருந்தனர். இவர்கள் திலீப்பை பார்க்க ஆர்வம் காட்டினர். பின்னர் 14 நாள்கள் நீதிமன்ற காவலில் திலீப்பை வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டதன்பேரில் அவர் கொச்சியில் உள்ள அலுவா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் மலையாள நடிகர் திலீப் கேரள நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே கேரள நடிகர் சங்க ஆலோசனை கூட்டம் நேற்று கொச்சியில் உள்ள நடிகர் மம்முட்டி இல்லத்தில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் நடிகை பாவனா பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைதான மலையாள நடிகர் திலீப் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல நடிகர் திலீப் கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலிருந்தும் நீக்கபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
