தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் பெரும் நஷ்டத்தில் இயங்கிவருவதாகவும் அவர் விரைவில் அந்நிறுவனத்தை இழுத்து மூடிவிட்டு வெறுமனே நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தவிருப்பதாகவும் தகவல்கள் நடமாடுகின்றன.

வுண்டர்பார் ஃபிலிம்ஸின் முதல்படமான ‘3’ தொடங்கி ‘மாரி 2’ வரை ஏராளமான படங்களைத் தயாரித்தாலும் சரியான நிர்வாகம் அமையாததால் இந்நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்திலேயே இயங்கிவருகிறது. இதனால் தனுஷுக்கு பல கோடி கடன் இருக்கிறது. இந்நிலையில் அந்நிறுவனத்தின் நிர்வாகியாக இருக்கும் வினோத் என்பவரும் அங்கிருந்து வெளியேறி தயாரிப்பாளராகும் முயற்சியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இவர் அங்கு பணிபுரியும்போதே வேறு சில படங்களின் தயாரிப்புக்கு ’உதவியாக’ இருந்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.தனுஷிடம் பணிபுரிகிறவர் என்பதால் அவரை நாயகனாக வைத்துத்தான் படம் எடுக்கப் போகிறார் என்று நினைக்கலாம். அதுதான் இல்லை.

அவர் விஷாலை கதாநாயகனாக வைத்துப் படம் தயாரிக்கவிருக்கிறாராம், அதற்காக விஷாலுக்கு ஒரு பெரும் தொகையை முன்பணமாகக் கொடுத்திருக்கிறாராம். இயக்குநர், மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடந்துகொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று சொல்கிறார்கள்.தனுஷ் நிறுவன நிர்வாகி விஷாலை வைத்துப் படமெடுக்கவிருக்கிறார் என்பது அனைவரையும் வியப்பிலாழ்த்தியுள்ளது.