நெட்ஃபிக்ஸ் நிறுவனத்தின் தி கிரே மேன் படப்பிடிப்புக்காக தனுஷ் சுமார் நான்கு மாதங்கள் அமெரிக்காவில் இருந்த நிலையில், நேற்று        (ஜூன் 30 ஆம் தேதி) அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

நடிகர் தனுஷ் அமெரிக்காவில் இருந்து நேரடியாக சென்னை வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஹைதராபாத்தில் தங்கியுள்ளார். அதாவது இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் தற்போது நடித்து வரும் இன்னும் பெயரிடாத படமான D43 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து விட்ட நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை ஹைதராபாத்தில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. ஒரே கட்டமாக நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ள நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டு நடித்து முடித்தபின் சென்னை திரும்பவுள்ளதாக கூறுபாடிகிறது.

இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக 'மாஸ்டர்' பட நாயகி மாளவிகா மோகனன் நடிக்கிறார். இந்த படத்திற்காக தற்போது தனுஷ் அமெரிக்காவில் இருந்து நேரடியாக ஹைதராபாத் வந்துள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

மேலும் அமெரிக்காவிற்கு மகன்கள் மற்றும் மனைவி ஐஸ்வர்யாவுடன் சென்ற தனுஷ், தற்போது தன்னுடைய மாமனார் ரஜினிகாந்த்... அமெரிக்காவில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாலும் , அவருக்கு உதவியாக தனுஷின் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருப்பதாலும் அவர்களை அங்கேயே விட்டு விட்டு இந்தியா திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

View post on Instagram