actor dhanush mari 2 complited in fight scene
நடிகர் தனுஷ், இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில், நடித்து வந்த 'மாரி-2' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் தற்போது முடிவடைந்துள்ளதாக பட குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான மாரி படத்தின் முதல் பாகம், தோல்வி அடைந்த நிலையில், தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த திரைப்படம் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இருக்காது என கூறப்படுகிறது.
இந்த படத்தில் நடிகர் தனுஷ்க்கு ஜோடியாக, நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார். நடிகை வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் கிருஷ்ணா, டோவினோ, தாமஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.
மாரி 2-ல் கடைசியாக நடிகர் தனுஷின் சண்டை காட்சி படமாக்கப்பட்டு முடிக்கப்பட்ட நிலையில். இன்னும் ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் எஞ்சி உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த பாடல் வெளிநாட்டில் படமாக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
