அடேங்கப்பா... வியக்க வைக்கும் பிரமாண்டம்! தனுஷின் 150 கோடி வீட்டை உள்ளே பார்த்திருக்கீங்களா? ஹோம் டூர் வீடியோ!

நடிகர் தனுஷ் பார்த்து பார்த்து கட்டியுள்ள, 150 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள வீட்டின் உள்புற தோற்றத்தின் வீடியோ வெளியாகி ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.
 

Actor dhanush 150 crore house home tour video

நடிகர் தனுஷ் சினிமா பின்புலத்தோடு... தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும்,  தன்னுடைய திறமையால் ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்தவர். இவர் ஹீரோவாக அறிமுகமானபோது, மிகவும் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானவர். இதனை பலமுறை, தனுஷின் தந்தை மிகவும் மனவேதனையோடு தெரிவித்துள்ளார். ஆனால் அன்று இவர், சந்தித்த அவமானங்களுக்கு தன்னுடைய வெற்றி மூலம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறார்.

தென்னிந்திய திரைப்படங்களை தாண்டி, பாலிவுட், மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடிக்கும் அளவுக்கு வளர்ந்தார். சமீபத்தில் கூட தனுஷ் நடிப்பில் வெளியான 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்த நிலையில், கடந்த மாதம் வெளியான 'வாத்தி' படத்திற்கும் தொடர்ந்து, நல்ல வரவேற்பு கிடைத்தது. ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படத்தில், தனுஷ் ஆசிரியர் வேடத்தில் நடித்திருந்தார். மாணவர்களுக்கு படிப்பு என்பது எந்த அளவுக்கு முக்கியம் என்கிற கருத்தை பதிவு செய்திருந்தது இந்த திரைப்படம்.

சல்வார் போட்ட சொர்க்கமே... டால் அடிக்கும் அழகில் ஏர்போட் வந்த ராஷ்மிகா! லேட்டஸ்ட் போட்டோஸ் கேலரி!

Actor dhanush 150 crore house home tour video

இப்படத்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கி வரும் 'கேப்டன் மில்லர்' என்கிற படத்திலும் தனுஷ் கவனம் செலுத்தி வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் நடிகர் தனுஷ் 3 வருடங்களாக சுமார் 150 கோடி செலவில் கட்டிய, பிரமாண்ட வீட்டின் கிரஹப்பிரவேசம் சமீபத்தில் நடந்தது. தன்னுடைய பெற்றோருக்காக ரஜினிகாந்த்தின் வீட்டை விட பல மடங்கு பணத்தை கொட்டி தன்னுடைய பெற்றோருக்காக இந்த வீட்டை தனுஷ் கட்டிய நிலையில், வீட்டின் கிரஹப்ரவேசத்தில் தனுஷின் ரசிகர்கள், மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

ஆபத்தான நிலையில் ICU-வில் அனுமதிக்கப்பட்ட பாம்பே ஜெயஸ்ரீ எப்படி இருக்கிறார்? உடல்நிலை குறித்து வெளியான தகவல்!

Actor dhanush 150 crore house home tour video

ரஜினிகாந்தின் குடும்பத்தை சேர்ந்த யாரும் இதில் பங்கேற்காத நிலையில், தனுஷின் மகள்களும் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது. மேலும் தனுஷ் ஏன் இவ்வளவு செலவு செய்து வீட்டை கட்டினார் என கேள்வி எழுந்த நிலையில், ரஜினிகாந்தின் குடும்பத்தினர் தனுஷின் பெற்றோரை தங்களுக்கு நிகராக நடத்தாமல், இரண்டாம் தரத்திலேயே நடத்தியதாகவும், எனவே தன்னுடைய பெற்றோரை... அவர்களை விட மிகவும் சொகுசாக வாழவைக்க வேண்டும் என்கிற வைராக்கியத்தோடு இந்த வீட்டை கட்டியதாக கூறப்பட்டது.

சினிமாவில் அட்ஜஸ்ட்மெட் பிரச்சனை இருக்கு..! தன்னுடைய அனுபவம் குறித்து பேசிய பிரியா பவானி ஷங்கர்..!

Actor dhanush 150 crore house home tour video

இது ஒருபுறம் இருக்க... தனுஷ் 150 கோடியை கொட்டி செலவு செய்த வீட்டின் வெளித்தோற்றத்தில் புகைப்படம் மட்டுமே இதுவரை வெளியான நிலையில், தற்போது அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் அளவில் கட்டப்பட்டுள்ள தனுஷின் ஹோம் டூர் வீடியோ வெளியாகி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. 

தற்போது வெளியாகியுள்ள வீடியோ இதோ..

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios