தனுஷ் நடித்து வெளிவர உள்ள படம் வட சென்னை. இந்த படத்தின் டீசர்  நேற்று வெளியானது. இதில் இடம் பெற்று உள்ள முத்தக்காட்சி அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்து உள்ளது. மற்றொரு புறம் சர்ச்சையை கிளப்பி உள்ளது

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா,கருணாஸ் உள்ளிட்ட நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த படத்தின் டீசர் நெற்றி வெளியாகி நல்ல வரவேற்பை  பெற்றாலும், இதில் இடம் பெற்றுள்ள முத்தக்காட்சி முகம் சுழிக்க வைத்து உள்ளது

சர்கார் படத்தில் விஜய் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த பின்பு அந்த காட்சி படத்திலிருந்து நீக்கப்பட்டது

இந்நிலையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கும் இந்த  படத்தில் முத்தக்காட்சி இடம் பெற்று உள்ளது அனைவரையும் அதிர்ச்சி  அடைய வைத்து உள்ளது

பொதுவாகவே இன்றைய இளைஞர்கள் சினிமா பார்த்து கெட்டு போகிறார்கள் என சொல்வது உண்டு..அதற்கேற்றவாறு இந்த படத்தில்  முத்தக்காட்சி வைக்கப்பட்டு உள்ளதாற்கு சர்ச்சை எழுந்துள்ளது.

 

இது குறித்து நடிகை கஸ்தூரி, அடுத்த கமல் தனுஷ் தான் என கிண்டல் செய்து உள்ளார்.