மணிகண்டனின் ‘ஆண்டவன் கட்டளை’, வெற்றிமாறனின் ‘வடசென்னை’ உட்பட பல முக்கிய படங்களில் நடித்த குணச்சித்திர நடிகர் சீனு மோகன் இன்று காலை சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 62.

துவக்கத்தில் கிரேசி மோகனின் நாடகக்குழுவில் முக்கிய நடிகராக இருந்த சீனுமோகன் ‘வருஷம் 16’ படத்தின் மூலம் இயக்குநர் ஃபாசிலால் திரை உலகுக்கு அறிமுகம் செய்யப்பட்டார். திரைப்படங்களில் தொடர்ந்து நடித்தாலும் சீனு மோகனின் ஆர்வம் நாடகங்களில் நடிப்பதிலேயே இருந்தது. 

கிரேசி மோகனின் முக்கிய நாடகங்களான ’மர்மதேசம் ரகசியம்’, ‘மாது ப்ளஸ் டூ’,’மதில்மேல் மாது’,’மேரேஜ் மேட் இன் சலூன்’, ‘ரிடர்ன் ஆஃப் கிரேசி தீவ்ஸ்’ ஆகிய நாடகங்களில் பிரதான பாத்திரங்களில் நடித்தார் சீனு.

இவர் இயக்குநர் மணிரத்னத்தின் நெருங்கிய நண்பரும் ஆவார். மணிரத்னத்தின் ‘அஞ்சலி’ ‘தளபதி’ சமீபத்தில் வெளிவந்த ‘செக்கச்சிவந்த வானம்’ உட்பட அவரது பல படங்களிலும் நடித்துள்ளார் சீனு மோகன்.