பிரபல நடிகர் சார்லி தான் எப்படி சினிமாவிற்குள் வந்தேன் என்றும், அதற்கு காரணமாக அமைந்தது யார் எனறும் கூறியுள்ளார்.

1983 ஆம் ஆண்டு பாலசந்தர் இயக்கிய, 'பொய்க்கால் குதிரை' படத்தில் காமெடியனாக சிறு வேடத்தில் அறிமுகமானவர். இந்த படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

விஜய், அஜித், ரஜினி, கமல் என அனைத்து முன்னணி நடிகளுடனும் கிட்ட தட்ட 500 க்கும் மேற்பட்ட படங்களில் காமெடியனாகவும், குணச்சித்திர வேடத்திலும் நடித்து பல விருதுகளை பெற்றுள்ளார்.

தற்போது மீண்டும் படங்களில் நடிக்க துவங்கியுள்ள சார்லி, கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த 'பாம்பு சட்டை', 'மாநகரம் 'ஆகிய படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி, ரசிகர்களை கவர்ந்தார்.

இந்நிலையில், தற்போது தான் சினிமாவிற்குள் வர காரணமாக இருந்தவர் தன்னுடைய கேர்ள் ப்ரண்ட் என கூறியுள்ளார். 

தொடர்ந்து பேசிய அவர் தன்னுடைய முதல் கேர்ள் ப்ரண்ட், பாட்டி தான் என்றும் தற்போது அவருக்கு 108 வயது ஆவதாகவும் அவர் தான் நான் சிறுவனாக இருக்கும் போது அனைத்து திரைப்படத்திற்கும் கூட்டி செல்வார், அப்போது என் மனதில் ஒரு நடிகனாக வேண்டும் என ஏற்பட்ட ஆசை தான் இப்போது தன்னை நடிகனாக உருவாகியுள்ளது என கூறியுள்ளார்.