தமிழ் சினிமாவில், காமெடி மற்றும் குணச்சித்திர நடிகராக அறியப்பட்ட சார்லி, 80 களில் இருந்து பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

குறிப்பாக நடிகர் விஜயுடன் காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு, அஜித்துடன் அமர்க்களம், போன்ற பல படங்களில் நடித்தார். தற்போது இவர் சத்தமே இல்லாமல் ஒரு சாதனையை செய்துள்ளார். 

இதுவரை 567 படங்களில் அவர் நடித்து முடித்துள்ளார். மேலும் தற்போது, பிழை,  தீர்ப்புகள் திருத்தப்படலாம், வால்டர், ஆகிய மூன்று படங்களில் நடித்து வருகிறார்.  இதில் தீர்த்து தீர்ப்புகள் திருத்தப்படலாம் சத்யராஜ் நடிக்கும் படம். வால்டர் திரைப்படத்தில்  சத்யராஜ் மகன் சிபிராஜுடன் நடித்து வருகிறார்.

பிழை படத்தில், இதுவரை நடித்திராத கெட்டப்பில், அதாவது தலைக்கு டை அடிக்காமல், மேக்அப் போடாமல் நடித்து வருவதாக பிரபல நாளிதழுக்கு கொடுத்த பேட்டியில் கூறியுள்ளார்.