நேற்று வெளியான சிவகார்த்திகேயன் படம் படுதோல்வி அடைந்திருக்கும் நிலையில், கோடம்பாக்கத்தில் அவரது போட்டியாளர்கள் பலரும் பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் நடமாடுகின்றன.

குறுகிய காலத்தில் தமிழின் முன்னணி நடிகர்கள் பட்டியலுக்கு முன்னேறியுள்ள சிவகார்த்திகேயன் நேற்று வெளியான ‘மிஸ்டர் லோக்கல்’ உட்பட தொடர்ச்சியாக மூன்று ஃப்ளாப் படங்கள் கொடுத்துள்ளார். இந்த லேட்டஸ்ட் தோல்வியை அவரது போட்டியாளர்களான சிம்பு, விஷால்,ஆர்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் ஸ்டார் ஹோட்டல்களில் பார்ட்டி வைத்துக்கொண்டாடியதாகத் தெரிகிறது.

இவர்களுக்கு ஒரு படிமேலே போய் நடிகர் அருண் விஜய் தனது ஓவர் உற்சாகத்தைத் தெரிவிக்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் வெறுமனே ஒரு ஸ்மைலியை மட்டும் போட்டுள்ளார். அந்த ஸ்மைலியானது ‘மிஸ்டர் லோக்கல்’ படத்தின் அட்டர் ஃப்ளாப்புக்கானது என்று பலரும் அவர் பக்கத்திலேயே கமெண்ட் போட்டுவருகிறார்கள்.