தெலுங்கு திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் பிரம்மானந்தம். இவர் ஒரு சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த கில்லி படத்தில் யாகம் நடத்தும் அர்ச்சகராக ஒரு காட்சியில் நடித்திருந்தாலும் வேற லெவலுக்கு மிரட்டியிருப்பார். 

இங்க எப்படி வைகை புயல் வடிவேல் இணைந்து நடிக்காத ஹீரோக்கள், படங்களின் பட்டியலை கூறிவிடலாமோ? அப்படி தெலுங்கு திரையுலகின் பிரபலமான பிரம்மானந்தம் நடிக்காத படங்கள் மிக, மிக குறைவு. அப்படி டோலிவுட்டின் முன்னணி கலைஞரான இவரிடம் இருக்கும் தனித்திறமை குறித்து வெளியாகியுள்ள புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

நடிகர் பிரம்மானந்தம் அவர்கள் பென்சிலால் ஓவியம் வரைவதில் திறமையானவர் என்று அவர் வரைந்த ஓவியங்கள் சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருவதில் இருந்து தெரிய வந்துள்ளது. குறிப்பாக அவர் திருப்பதி வெங்கடாஜலபதியின் திருவுருவத்தை அச்சுஅசலாக வெங்கடாஜலபதியை நேரில் நிற்பது போல் வரைந்து அசத்தியுள்ளார். இதை பார்க்கும் ரசிகர்கள் வெங்கடாஜலபதி நேரில் நிற்பது போல் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த ஓவியத்தை தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் பிறந்த நாள் பரிசாக கொடுத்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.