Asianet News TamilAsianet News Tamil

காதல் முதல் Love வரை.. 20 ஆண்டுகால பயணத்தில் உடன் நின்ற ஊடகங்கள் - கையெடுத்து கும்பிட்ட பரத்!

பரத் நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் தான் "லவ்" இது அவருடைய ஐம்பதாவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Bharath Thanked media for the support on his 50th movie audio launch
Author
First Published Jul 13, 2023, 11:28 PM IST

சில சமயங்களில் நல்ல திறமை இருந்தும் உரிய அங்கீகாரம் கிடைக்காமல் பல ஆண்டுகளாக தவித்து வரும் சில நடிகர்களின் பட்டியலில் முதன்மையானவர் பரத். கடந்த 2003ம் ஆண்டு சங்கர் இயக்கத்தில் வெளியான "பாய்ஸ்" திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான பலரில் ஒருவர் பரத். அந்த திரைப்படத்தில் தோன்றிய ஜெனிலியா முன்னணி நடிகையாக இருந்து, அதன் பிறகு திருமணம் ஆகி தற்போது செட்டில் ஆகியுள்ளார். 

நடிகராக அறிமுகமான தமன் தற்பொழுது தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் மிகப்பெரிய இசையமைப்பாளராக விளங்குகிறார். காதல் மணிகண்டன் நிலை பற்றி அனைவரும் அறிந்ததே, அந்த வகையில் பெரிய வெற்றியும் அடையாமல், பெரிய தோல்வியும் அடையாமல் பயணித்து வரும் இருவர் தான் நகுல் மற்றும் பரத். பாய்ஸ் படத்தை தொடர்ந்து பரத் நடிப்பில் வெளியான காதல் திரைப்படம் அவருடைய ரேஞ்சை புரட்டிப்போட்டது.

"இப்போதான் புரியுது சிங்கர்ஸ் எவ்ளோ கஷ்டப்படுறாங்கனு".. ஷாக் கொடுத்த இயக்குனர் - புதிய அவதாரத்தில் விஷால்!

ஆனால் அதனை தொடர்ந்த அவர் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியபோதும், அவர் நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை. சுமார் 20 ஆண்டுகாலமாக அவரும் போராடிக்கொண்டே தான் இருக்கின்றார். அந்த வகையில் தற்பொழுது பரத் நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் தான் "லவ்" இது அவருடைய ஐம்பதாவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் அவருடைய "முன்னறிவான்" மற்றும் சமரா (மலையாளம்) ஆகிய இரு திரைப்படங்கள் இன்னும் வெளிவராமல் உள்ளது. தற்பொழுது லவ் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ள நிலையில் சென்னையில் நடந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவின், செய்தியாளர் சந்திப்பில் பேசிய பரத் "இந்த 20 ஆண்டுகாலமாக நான் நடித்த திரைப்படங்களை பார்த்து, அந்த படம் சரியில்லை என்றாலும் கூட எனது நடிப்பு அதில் சிறந்த வகையில் அமைந்துள்ளது என்று என்னை தொடர்ந்து உத்வேகப்படுத்திக் கொண்டிருக்கும் ஊடக நண்பர்களை வணங்குகிறேன் என்று கூறி இருகரம் கூப்பி வணங்கினர்".

ஒரு படம் எடுத்து முடித்த பிறகு, அந்த படம் வெளியாகும் வரை படக்குழு படும்பாடு சொல்லி மாளாது என்று மிகவும் வருத்தத்துடன் பேசினார். எல்லாவற்றையும் தாண்டி தற்போது லவ் திரைப்படம் உங்கள் முன் வெளியாகவுள்ளது அனைவரும் தங்கள் வரவேற்பை தரவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். லவ் திரைப்படத்தை ஆர்பி பாலா என்பவர் இயக்க, மிரல் படத்திற்குப் பிறகு மீண்டும் இந்த திரைப்படத்தில் பரத்துடன் ஜோடி சேர்ந்துள்ளார் வாணி போஜன்.

காதல்... மோதல்... கொலை! பரத் - வாணி போஜன் நடித்துள்ள பக் பக் 'லவ்' ட்ரைலர் வெளியானது!

Follow Us:
Download App:
  • android
  • ios