முதல் முறையாக தன்னுடைய மனைவியுடன் இணைத்து... இரட்டை குழந்தைகளின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகர் பரத்தின் அறிமுகம் 'பாய்ஸ்' திரைப்படம் என்றாலும், இவரை ஒரு ஹீரோவாக அனைவரும் ஏற்றுக்கொண்டது 'காதல்' படத்தில் தான். முதல் படத்திலேயே தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார், இந்த படத்தை தொடர்ந்து. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

எம்.மகன், சேவல் என கிராமத்து கதையம்சம் கொண்ட படங்கள் இவருக்கும் அதிகமாக கிடைத்தது. பின் தன்னுடைய நடிப்பில் வித்தியாசம் காட்ட நினைத்த பரத், நேபாளி, 555 உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால் பரத் எதிர்பார்த்த அளவிற்கு இந்த படங்கள் அவருக்கு கைகொடுக்க வில்லை எனலாம். தற்போது தரமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் பரத்.

முதல் முறையாக தன்னுடைய மனைவியுடன் இணைத்து... இரட்டை குழந்தைகளின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். பரத் நடிப்பில் இந்த வருடம் ஒரு திரைப்படம் கூட வரவில்லை என்றாலும், விரைவில் பொட்டு , சிம்பா ஆகிய படங்கள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.