Actor became as political leader is the greatest disaster for the country - Prakash Raj ...
திரைப்பட நடிகர்கள் அரசியல் தலைவராவது நாட்டிற்கு ஏற்படும் மிகப்பெரிய அழிவு என நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
ரஜினி, கமல் உள்ளிட்டோரின் அரசியல் பிரவேசம் எப்போது நடைப்பெறும்? என்று அவர்களது தொண்டர்கள், ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
கமல் பல்வேறு அரசியல் கருத்துக்களை கூறி ஆளுங்கட்சியினரை வறுத்தெடுத்து வருகின்றார். அந்த வரிசையில் நடிகர் பிரகாஷ்ராஜ் அரசியல் சீர்கேட்டை அவ்வப்போது விமர்சித்து விருந்தளிக்கிறார்.
இந்த நிலையில், "திரைப்பட நடிகர்கள் அரசியல் பிரவேசம் செய்வதால் நாட்டிற்கு பேரழிவுதான் ஏற்படும்.
நான் எந்த கட்சியிலும் சேரப்போவதில்லை. ஆனால் தவறை தட்டிக்கேட்பது எனது உரிமை" என்று பெங்களூருவில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அவர் பேசியுள்ளார்.
