தெலுங்கு திரையுலகில், முன்னணி நடிகராக இருப்பவர் பாலகிருஷ்ணா. இவர் ஆந்திராவில் உள்ள ஹரிந்துபூர் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

இதனால் அவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு போது, பத்திரிக்கையாளர்கள் சிலர் அவரை சூழ்ந்து கொண்டு, புகைப்படம் எடுப்பது, வீடியோ எடுப்பது என அவர்களுடைய பணியை செய்துள்ளனர்.

பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் போது... பத்திரிகையாளர்கள் இப்படி செய்வதால், கோபமான பாலகிருஷ்ணா பத்திரிகையாளர் ஒருவரை கன்னத்தில் அறைந்தார். இதனை எதிர்த்து அவர் கேள்வி எழுப்பிய போது... 'உன்னை கொலை செய்துவிடுவேன். எனக்கு குண்டு வீசவும் தெரியும், கத்தி வீசவும் தெரியும்" என கூறி மிரட்டியுள்ளார்.

இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.