அடுத்த முதலமைச்சர் யார் என்று தமிழ்நாட்டில் பெரும் போட்டி நிலவி வருகிறது . ஒரு தரப்பினர் அம்மா கை காட்டி சென்ற ஓ.பி.எஸ் தான் வரவேண்டும் என கூறிவருகின்றனர். மற்றொரு பக்கம் சசிகலா நிர்ணயித்தவர் தான் வர வேண்டும் என கூறிவருகின்றனர்.
இந்நிலையில் சசிகலா நேற்று சொத்து குவிப்பு வழக்கு காரணமாக சிறை சென்றுள்ள நிலையில் அவருடைய ஆதரவாளரான எடப்பாடி. பழனிச்சாமியை பதவியேற்க கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் கூறியுள்ளார். தற்போது தற்போது இது குறித்து நடிகர் பாக்கியராஜ் சீட்டு கொடுத்தவருக்கு விசுவாசமாக இருக்க நினைக்கும் எம்எல்ஏக்கள், ஓட்டு போட்ட மக்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார் அதிரடியாக எடப்பாடி பழனிசாமியை சாடியுள்ளார்.
