ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை நடிகைகள் அனைவரும் சந்திக்கும் ஒரே பிரச்சனை பாலியல் தொல்லை. படுக்கைக்கு வந்தால் தான் பட வாய்ப்பு என தயாரிப்பாளர், ஹீரோ, இயக்குநரால் மிரட்டப்படுவதாக பல நடிகைகளும் பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். மலை அளவிற்கு குவிந்த புகார்களுக்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் இணைந்து மீ டு என்ற அமைப்பை தொடங்கினர். பல பிரபலங்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பகிர ஆரம்பித்தனர். 

இதையும் படிங்க: கோடி, கோடியாய் கொடுத்தாலும் அவர் மட்டும் வேண்டாம்... வாரிசு நடிகரை ஒதுக்கும் காஜல் அகர்வால்?

கோடிகளில் சம்பளம் கொடுக்கிறோம் ஒரு முறை அட்ஜெட்ஸ் செய்து கொண்டால் என்ன? என்று நடிகைகளை நாடும் தயாரிப்பாளர்கள் திரைத்துறையில் ஏராளம். அதில் சிலர் மட்டுமே தங்களது திறமையால் ஜெயித்து முன்னணி நடிகையாக வலம் வர முடிகிறது. நடிகைகள் மட்டுமின்றி மேக்கப் ஆர்ட்டீஸ், துணை இயக்குநர், ஹேர் ஸ்டைலிஷ், டெக்னீஷியன் என்று பெண்கள் சினிமா சார்ந்த எந்த பிரிவில் வேலை பார்த்தாலும் அவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்வது உண்டு.

இதையும் படிங்க: வீட்டுக்குள் வித்தியாசமாக படுகவர்ச்சி போட்டோ ஷூட்... அப்பா, அம்மாவுடன் சேர்ந்து எல்லை மீறிய பிரபல நடிகை...!

சினிமா உலகில் பெண்களுக்கு மட்டுமே பாலியல் தொல்லைகள் இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் ஒருவர் வெளிப்படையாக கூறியுள்ள பாலியல் குற்றச்சாட்டு திரையுலகையே அதிரவைத்துள்ளது. இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆயுஷ்மான் குரானா, இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பட வாய்ப்பு கேட்டு தயாரிப்பாளர் ஒருவரை சந்திக்க சென்றதாகவும், அவர் தன்னிடம் தகாத முறையில் நடக்க முயன்றதாகவும் கூறியுள்ளார். மேலும் அதனை சகித்து கொள்ள முடியாமல் உடனே அவரை தடுத்து அந்த இடத்தை விட்டு வெளியேறியதாகவும் பகீர் குற்றச்சாட்டை கூறியுள்ளார்.