2019ம் ஆண்டு அதர்வா - ஆர்.கண்ணன் இயக்கத்தில் வெளியான “பூமராங்” திரைப்படத்தில் மேகா ஆகாஷ், இந்துஜா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து அதர்வா - ஆர்.கண்ணன் கூட்டணி மீண்டும் “தள்ளிப்போகதே படம் மூலம் இணைந்தது. இது தெலுங்கில் பெரும் வெற்றியடைந்த 'நின்னு கோரி' படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

அதர்வாவுடன் தள்ளிப்போகதே படத்தை எடுத்து வந்த அதே நேரத்தில் சந்தானம் - ஆர்.கண்ணன் கூட்டணியில் பிஸ்கோத் படத்தின் வேலையும் சென்றுகொண்டிருந்தது. தீபாவளி விருந்தாக பிஸ்கோத் திரைப்படம் வெளியான நிலையில், தற்போது “தள்ளிப்போகதே” படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதில் அதர்வாவிற்கு ஜோடியாக அனுபா பரமேஸ்வரன் உட்பட அமிதாஷ், ஆடுகளம் நரேன், காளிவெங்கட் என  பலர் நடித்துள்ளனர்.

தற்போது இந்தப் படத்தை ஜனவரியில் ரிலீஸ் செய்ய உள்ளதாக ஆர்.கண்ணன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதை அவருடைய தயாரிப்பு நிறுவனமான மசாலா பிக்ஸ் அறிவித்துள்ளது. தெலுங்கில் முன்னணி ஹீரோவான நானியின் கதாபாத்திரத்தில் அதர்வா நடித்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.