உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கவுள்ள பிக்பாஸ்2 நிகழ்ச்சி விரைவில் துவங்க உள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சி பற்றி டீசர் தற்போது வெளியாகி வருகிறது. மேலும் இனி வரும் வாரங்களில் வெளியாக உள்ள டீசரின் ஷூட்டிங்கிலும் கமல் கலந்துக்கொண்டு நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள டீசரில்,  தல அஜித்தின் மங்காத்தா, ஜீரோ, மேகா, ஆகியப்படங்களில் நடித்து பிரபலமான நடிகர் அஸ்வின்னின் மனைவி ஒரு காட்சியில் நடித்துள்ளார். மேலும் கமலுடன் எடுத்த ஒரு புகைப்படத்தை பகிர்ந்து இதனை உறுதி செய்துள்ளார் அஸ்வின். 

இதைப்பார்த்த பலரும் அவர் பிக்பாஸ்2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்கிறாரா என கேட்க துவங்கியுள்ளனர்.

இந்த கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை என்றாலும், அவரது மனைவி பிக்பாஸ் டீசரில் தோன்றியிருப்பது தெரியவந்துள்ளது. டீஸர் ஷூட்டிங்கின்போது தான் அஸ்வின் கமலை சந்தித்து போட்டோ எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.