’திருமணத்துக்குப் பிறகு நடிப்பது அவ்வளவு பெரிய பாவமா?’...ஆர்யாவின் மனைவி நடிகை ஆயிஷா ஆவேசம்...

‘நான் வயதில் மிகவும் சின்னப்பெண். சினிமாவில் நான் சாதிக்க வேண்டியவைகள் எவ்வளவோ உள்ளன. இந்நிலையில் என்னை நோக்கி மைக்கை நீட்டும் அத்தனை பேரும் தொடர்ந்து நடிப்பது குறித்து ஆச்சர்யம் கொள்வது கவலை அளிக்கிறது.

actor arya wife aayisha interview

‘ஒரு நடிகை திருமணம் முடிந்த பிறகு கணவனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் சேவை செய்யும் அடிமையாக மாறிவிடவேண்டும் என்று ஒட்டுமொத்த சமூகமும் எதிர்பார்க்கிறது. நான் ஆர்யாவைத் திருமணம் செய்த பிறகு என் முன்னால் மைக்கை நீட்டும் அத்தனை பேரும் நீங்கள் தொடர்ந்து நடிக்கப்போகிறீர்களா என்று ஆச்சர்யக்குறியுடனேயே கேள்வி கேட்கிறார்கள்’என்று கொந்தளிக்கிறார் நடிகை ஆயிஷா.actor arya wife aayisha interviewகடந்த மார்ச் மாதம் 10ம் தேதியன்று ஆர்யாவைத் திருமணம் செய்துகொண்ட நடிகை சாயிஷா அப்போதே தான் தொடர்ந்து நடிக்கவிருப்பதாகவும், திருமணம் தனது நடிப்புக்கு ஒரு போதும் குறுக்கே நிற்காது என்றும் கூறியிருந்தார். அந்த சமயத்தில் அவர்களது திருமணப் பரிசாக இருவரும் ஜோடியாக இணைந்து நடிக்கும் ‘டெடி’என்ற படம் கமிட் ஆக அப்படத்தின் படப்பிடிப்பு பயணத்தையே தங்கள் ஹனி மூனாகக் கொண்டாடி மகிழ்ந்தது அந்த ஜோடி. அடுத்த படியாக திருமணத்துக்கு முன்னரே சூர்யாவின் ஜோடியாக கே.வி.ஆனந்தின் ‘காப்பான்’படத்தில் சாயிஷா ஒப்பந்தமாகியிருந்த நிலையில், திடீர் எண்ட்ரியாக அப்படத்துக்கு வில்லனாக மாறினார் ஆர்யா.actor arya wife aayisha interview

திருமணத்துக்குப் பின் கணவன், மனைவி இரு வேறு துருவங்களாக நடித்துள்ள ‘காப்பான்’இன்னும் நான்கே தினங்களில் வரும் வெள்ளியன்று ரிலீஸாக உள்ள நிலையில், அப்பட புரமோஷனுக்காக பத்திரிகையாளர்களுக்குத் தொடர்ந்து பேட்டி அளித்து வரும் ஆயிஷா, பெரும்பாலானவர்கள் தான் தொடர்ந்து படங்களில் நடித்து வருவதை ஆச்சர்யமாகப் பார்ப்பதை நினைத்து கவலை அடைந்துள்ளார். ‘நான் வயதில் மிகவும் சின்னப்பெண். சினிமாவில் நான் சாதிக்க வேண்டியவைகள் எவ்வளவோ உள்ளன. இந்நிலையில் என்னை நோக்கி மைக்கை நீட்டும் அத்தனை பேரும் தொடர்ந்து நடிப்பது குறித்து ஆச்சர்யம் கொள்வது கவலை அளிக்கிறது. பெண்கள் திருமணமாகிவிட்டால் கணவனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பணிவிடை செய்து வீட்டிலேயே முடங்கிக்கிடக்கவேண்டும் என்று நினைக்கும் மனோபாவம் மாறவேண்டும்’என்கிறார் ஆயிஷா.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios