அப்பாவானார் நடிகர் ஆர்யா... நண்பர் விஷால் பகிர்ந்த மகிழ்ச்சியான செய்தி... என்ன குழந்தை தெரியுமா?
திரையுலக நட்சத்திரங்களான ஆர்யா - சாயிஷா தம்பதி குறித்து மிகவும் மகிழ்ச்சியான செய்தியை அவர்களுடைய நண்பரான நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை திரைப்படம் நேற்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததோடு, ஆர்யாவின் கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் பெரிதாக பாராட்டப்பட்டது. இதனையடுத்து ஆர்யா நடிப்பில் தயாராகி வரும் அரண்மனை 3, எனிமி ஆகிய படங்களின் அப்டேட்டுக்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றனர்.
இந்நிலையில் திரையுலக நட்சத்திரங்களான ஆர்யா - சாயிஷா தம்பதி குறித்து மிகவும் மகிழ்ச்சியான செய்தியை அவர்களுடைய நண்பரான நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். அதாவது விஷால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் "இந்த செய்தியை சொல்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் மாமாவாகி உள்ளேன். எனது சகோதரர் ஆர்யா மற்றும் சாயிஷாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. கட்டுப்படுத்த முடியாத உணர்ச்சிக்கு ஆளாகி உள்ளேன். ஆர்யா அப்பாவாக புதிய பொறுப்பை எடுத்துள்ளார்" என்று நல்ல செய்தியை தெரிவித்துள்ளார்.
நடிகர் ஆர்யாவும், சாயிஷாவும் முதல்முறையாக, 'கஜினிகாத்' படத்தில் இணைந்து நடித்தபோது, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின் இருவரும் பெற்றோரின் சம்மதத்துடன், கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி அன்று திருமணம் செய்து கொண்டனர். கடந்த முறை லாக்டவுனில் கூட சாயிஷா சற்றே குண்டாக இருந்ததால் ஏதாவது விசேசமா? என கேட்டு நச்சரித்து வந்த ரசிகர்கள், அவர் கர்ப்பமாகவே இருந்ததாக வதந்திகளை பரப்பினர். ஆனால் அதற்கு சாயிஷா அப்போது மறுப்பு தெரிவித்ததோடு, வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். தற்போது திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் பெற்றோராக புது பொறுப்பேற்றுள்ள ஆர்யா, சாயிஷாவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.