Asianet News TamilAsianet News Tamil

Arun Vijay : "செம சிம்பிள் சார் நீங்க".. சந்தைக்கு மகனோடு சென்று மீன் வாங்கிய அருண் விஜய் - வைரலாகும் Clicks!

Actor Arun Vijay : பிரபல நடிகர் அருண் விஜய் இப்பொது இயக்குனர் பாலா இயக்கியுள்ள வணங்கான் என்ற படத்தில் நடித்துள்ளார். விரைவில் அந்த படம் வெளியாகவுள்ளது.

Actor Arun Vijay purchasing fish in market his son photos viral in internet ans
Author
First Published Apr 1, 2024, 5:47 PM IST

தமிழ் சினிமாவில் சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வரும் மிக மூத்த நடிகர் தான் விஜயகுமார். இவருடைய மூத்த மனைவி முத்து கண்ணுவிற்கு பிறந்த மகன் தான் பிரபல நடிகர் அருண் விஜய். கடந்த 1995ம் ஆண்டு வெளியான "முறை மாப்பிள்ளை" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். 

"முறை மாப்பிள்ளை" திரைப்படம், சுந்தர் சி-யின் இரண்டாவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 30 ஆண்டுகளாக தமிழ் மொழியில் முன்னணி நட்சத்திரமாக விளங்கி வந்தாலும் குறைந்த அளவிலான படங்களிலேயே அருண் விஜய் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் சுமார் 3 ஆண்டுகள் அவர் எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்து வந்தார். 

Anna Serial: அரிவாள் உடன் விரட்டி வந்த ஷண்முகம்; மரண பயத்தில் ஓடி ஒளிந்த செளந்தரபாண்டி- அண்ணா சீரியல் டுவிஸ்ட்

2015 ஆம் ஆண்டு பிரபல நடிகர் தல அஜித் நடிப்பில் வெளியான "என்னை அறிந்தால்" திரைப்படம் அவருக்கு ஒரு மிக மிகப் பெரிய அளவிலான வரவேற்பை கொடுத்தது. அதன் பிறகு குற்றம் 23, தடம், மாஃபியா, யானை சினம், மிஷன் போன்ற படங்கள் அவருக்கு வெற்றி திரைப்படங்களாக மாறியது. தற்பொழுது பிரபல இயக்குனர் பாலா இயக்கத்தில் வணங்கான் என்கின்ற திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார். 

இந்நிலையில் ஒரு நடிகருக்கு உண்டான எந்த ஆடம்பரமும் இல்லாமல், எளிமையாக ஆட்டோவில் தனது மகனுடன் மீன் சந்தைக்கு சென்று, ஏழை எளிய வியாபாரிகளிடம் மீன் வாங்கி வந்துள்ளார் அருண் விஜய். தற்பொழுது சமூக வலைதளங்களில் இந்த புகைப்படங்கள் பெரிய அளவில் பகிரப்பட்டு வருகின்றது. பொதுவெளியில் பயணிக்கும்போது அருண் விஜய் பெரிய அளவில் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் பயணிப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Daniel Balaji : "Godman" முதல் மக்கள் செல்வனின் "பேய் பசி" வரை - நடிகர் டேனியல் பாலாஜியின் வெளிவராத படங்கள்!

Follow Us:
Download App:
  • android
  • ios