உடைந்த கையோடு விஜயகாந்திற்கு அஞ்சலி - கேப்டன் நினைவாக புதிய முயற்சி - உறுதி அளித்த அருண் விஜய்! என்ன அது?
Actor Arun Vijay : கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி பிரபல நடிகரும், அரசியல் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் காலமானார். அவருடைய மறைவுக்கு பல திரைத்துறை பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
பிரபல நடிகர் அருண் விஜய் அவர்கள் தற்பொழுது இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் "வணங்கான்" என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவருடைய "மிஷன்" திரைப்படம் வருகின்ற பொங்கல் அன்று வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் படபிடிப்பின் போது ஏற்பட்ட சிறு விபத்து காரணமாக வலதுகையில் அவருக்கு முறிவு ஏற்பட்டு கடந்த ஒரு மாத காலமாக அருண் விஜய் ஓய்வில் இருந்து வந்தார்.
இந்த சூழலில் அவரால் நடிகர் விஜயகாந்த் அவருடைய இறுதி சடங்கில் பங்கேற்க முடியவில்லை, இதனையடுத்து, உடைத்த கையேடு இன்று விஜயகாந்த் நினைவிடத்திற்கு நேரில் சென்று ஆரத்தி காட்டி அவருக்கு தனது இறுதி அஞ்சலியை செலுத்தினார் நடிகர் அருண் விஜய். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசினார்.
அப்போது என் காயம் காரணமாக என்னால் விஜயகாந்த் அய்யாவின் இறுதி சடங்கில் பங்கேற்க முடியவில்லை. அது என் மனதில் ஒரு ஆறாத வடுவாக மாறிவிட்டது என்று கூறினார். திரையுலகுக்கு வருபவர்கள் ரஜினிகாந்தை போல கமலஹாசனை போல மிகச் சிறந்த நடிகர்களாக வரவேண்டும் என்று எண்ணுவார்கள், ஆனால் நான் விஜயகாந்த் போல ஒரு சிறந்த ஆக்ஷன் ஹீரோவாக வரவேண்டும் என்று எண்ணினேன்.
காரணம் அவருடைய சண்டை ஒரு தனித்துவமான தன்மையை கொண்டிருக்கும், அதைப்போல நானும் ஒரு நல்ல ஆக்ஷன் ஹீரோவாக ஆகா விரும்பினேன். அவருடன் பணியாற்றிய பல ஸ்டண்ட் கலைஞர்களுடன் நானும் பணியாற்றியுள்ளேன், அவர்கள் என்னுடைய சண்டைக்காட்சிகள் குறித்து விஜயகாந்திடம் கூறியுள்ளனர். அப்போது ஒரு முறை என்னை படபிடிப்பு தளத்தில் சந்தித்த விஜயகாந்த், என்னுடைய வளர்ச்சியை குறித்து மிகவும் சந்தோஷப்பட்டார்.
மேலும் ரிஸ்க்கான காட்சிகள் எப்படி நடிப்பது என்பது குறித்தும் எனக்கு சொல்லிக் கொடுத்தார். அவருடைய மறைவு என்பது தமிழ் மக்களுக்கு ஒரு மிகப்பெரிய இழப்பாகவே பார்க்கப்படுகிறது. மேலும் அவர் நடிகர் சங்கத்தின் எழுச்சிக்கு காரணமாக இருந்த நிலையில் புதிதாக கட்டப்படும் அந்த கட்டிடத்திற்கு எதோ ஒரு வகையில் அவருடைய பெயரை வைக்கவேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.
மேலும் அவர் நமக்கு கற்றுக் கொடுத்த பல விஷயங்களை நாம் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும் தன்னுடைய படங்களில் அனைவருக்கும் ஒரே மாதிரியான உணவு தான் வழங்கப்படும் என்றும் உறுதி அளித்தார். விஜயகாந்த் விட்டுச் சென்ற பல நல்ல பணிகளை நடிகர்களாகிய அனைவரும் தொடர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.