தமிழ் சினிமாவில் சமீபகாலமாக வாரிசு நடிகர், நடிகைகளின், வரவேற்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அந்த வகையில் தற்போது பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார்.

அறிமுக இயக்குனர் ஹரி ராம் இயக்கும் படமொன்றில் இவர் ஒப்பந்தமாகியுள்ளார்.  இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து தயாரித்த கனா படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில்,  நடித்த தர்ஷன் கதாநாயகனாக நடிக்க உள்ளார். 

இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  படித்து முடித்ததும், கடந்த 5 வருடமாக தந்தையின் சிங்கப்பூர் நிறுவனத்தை கவனித்து வந்த இவர்,  தற்போது ஹீரோயினாக அறிமுகமாக உள்ளது குறித்து ஊடகம் ஒன்றிற்கு கூறுகையில்.... 

இதுவரை தொழில்ரீதியாக வேலை பார்த்து வந்தாலும்,  நடிகையாக வேண்டும் என்பது என்னுடைய கனவாக இருந்தது.

ஏற்கனவே பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தது.  சில படங்கள் நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் ஆக இருந்தும் அதனை ஏற்க முடியவில்லை.  தற்போது இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதன் முக்கிய காரணமும் இந்த படத்தின் கதை தான் என கூறியுள்ளார். 

மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.  மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.