நடிகர்கள் விவாகரத்து பெற்ற பின், மீண்டும் காதலில் விழுவது புதிதில்லை. அதிலும் பாலிவுட் திரையுலகம் என்றால் சொல்லவே வேண்டாம்.  இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகிறது.

இந்நிலையில் திருமணம் செய்து கொள்ளாமலேயே, காதலியுடன் லிவிங் டூ கெதர் வாழ்க்கையில் வாழ்ந்து வரும், நடிகர் அர்ஜுன் ராம்பால் தான் தந்தையாக உள்ளதை புகைப்படத்தோடு வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

இவர் Femina Miss India Universe பட்டம் பெற்றவரும், மாடலுமான... Mehr Jesia என்பவரை 1998 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக, இவர்கள் கடந்த வருடம் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

விவாகரத்துக்கு பின் அர்ஜுன் ராம்பால் தென்னாப்பிரிக்க நடிகை கேப்ரியலாவை என்பவரை காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல், லிவிங் டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். 

இந்நிலையில் கேப்ரியலா திருமணம் ஆவதற்கு முன்பே கர்ப்பமாகியுள்ளார். இதுகுறித்த புகைப்படத்தை அர்ஜுன் ராம்பால் அவருடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு, கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன் என கூறி தன்னை தந்தையாக்கியதற்கு கேப்ரியாலாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.