கடந்த ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான 'தனி ஒருவன்' படத்தில் அட்டகாசமான வில்லன் நடிப்பை வெளிப்படுத்திய அரவிந்தசாமி.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

 தற்போது மீண்டும் ஜெயம் ரவியுடன் இணைந்து 'போகன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை 'ரோமியோ ஜூலியட்' இயக்குனர் லட்சுமண் இயக்கி வருகிறார் என்பதும், பிரபுதேவா தயாரித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே,.

இந்நிலையில் இந்த படத்திற்கு இசையமைத்து வரும் டி.இமான், அரவிந்தசாமியை ஒரு பாடலை பாட வைத்துள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. 

ஏற்கனவே அரவிந்தசாமி, மணிரத்னம் இயக்கிய 'இருவர்' படத்தில் இரண்டு பாடல்களையும், தனி ஒருவன்' படத்தில் ஒரு தீம் பாடலையும் பாடியுள்ள நிலையில் இவர் மேலும் ஒரு பாடலை தற்போது பாடியுள்ளார்.