actor annadharaj meet rajinikanth

அரசியல் சூழல் குறித்து அவ்வப்போது காரம் சாரமான கருத்துக்களை தெரிவித்து வரும் நடிகர் ஆனந்த ராஜ் தற்போது தீடீர் என ரஜினியை அவரது வீட்டில் சந்தித்துப் பேசியுள்ளார்.

சமீபத்தில் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்து புகை படம் எடுத்துக்கொண்டபோது, ரசிகர்களிடம் பேசுகையில், சிஸ்டம் சரி இல்லை என்றும், நாடு கெட்டுபோய் கிடக்கிறது என்றும் தெரிவித்தார்.
மேலும் நான் அரசியலுக்கு வருவது குறித்து ஆண்டவன் தான் தீர்மானிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

அதே போல ரசிகர்களை பார்த்து, போருக்கு தயாராகுங்கள் என தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து சூசகமாக தெரிவித்தார். 

இந்நிலையில், அதிமுகவை விட்டு விலகிய நடிகர் ஆனந்தராஜ் இன்று ரஜினியை அவரது வீட்டில் சந்தித்து பேசினார்... சுமார் அரைமணிநேரத்திற்கும் மேல் நடைபெற்ற இந்த சந்திப்பில் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து விவாதிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.