"நான் பண்ண விரும்பல விமர்சனம்.. மக்களுக்கு வேணும் விமோச்சனம்".. விஜயின் அரசியல் என்ட்ரி - TR ரியாக்ஷன் என்ன?
Director T Rajendar : பிரபல நடிகர் சிம்பு அவர்களின் தந்தையும், மூத்த தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகருமான டி. ராஜேந்தர், விஜயின் அரசியல் வருகை குறித்து பேசியுள்ளார்.
விரைவில் தனது திரைப்பட வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க உள்ள தளபதி விஜய் அவர்கள் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில், முதல்வர் வேட்பாளராக தனது "தமிழக வெற்றி கழகம்" மூலம் போட்டியிட இருக்கின்றார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று பிப்ரவரி 2ம் தேதி தளபதி விஜய் அவர்களே வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அவருடைய அரசியல் வருகையை வரவேற்று சினிமாத்துறை பிரபலங்களும், பல அரசியல் தலைவர்களும் தங்களுடைய வாழ்த்துக்களையும் வரவேற்பையும் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் விஜய் அவர்களுடைய அரசியல் வருகையில் வரவேற்ற வாழ்த்து கூறியுள்ளார்.
இந்த சூழ்நிலையில் பிரபல இயக்குனரும் நடிகருமான டி ராஜேந்தர் அவர்கள் இன்று ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது விஜயின் அரசியல் வருகையை தானும் வரவேற்பதாக கூறியுள்ளார். அரசியல் என்பது ஒரு பொது வழி, இதில் யார் வேண்டுமானாலும் பயணிக்கலாம். அதில் எந்த தவறும் இல்லை. இந்த சூழ்நிலையில் நான் விஜய் அவர்களுடைய அரசியல் நுழைவு குறித்து "பண்ண விரும்பவில்லை விமர்சனம், நாட்டு மக்களுக்கு எப்படியாவது வேண்டும் ஒரு விமோசனம்" என்று கூறி அவர் பாணியில் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தளபதி விஜய் அவர்களுடைய புலி திரைப்பட இசை வெளியிட்டு விழாவில் விஜயை புகழ்ந்து ராஜேந்தர் பேசிய வசனங்கள் இன்றளவும் பிரபலம். அவருடைய மகன் சிம்புவின் 48வது படமும் வெகு ஜோராக தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.