தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 74 நாட்களாக காச்சல் மற்றும் நீர்சத்து குறைபாடு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இன்னும் சில தினங்களில் முதலமைச்சர் வீடு திரும்புவார் என எதிர்பார்க்க பட்ட நிலையில் 
நேற்று திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது .

இந்த தகவலால் அறிந்த எம்.எல்.ஏ கள் மற்றும் அ.தி.மு.க தொண்டர்கள் பலர் அப்போலோ மருத்துவமனை முன் திரண்டனர். 

அதேபோல் பல சினிமா பிரபலன்களான,நடிகர் விஷால், ஹன்சிகா, கல்பாத்தி அகோரம் அர்ச்சனா, மோகன் ராம், ஆர்யா, குஷ்பூ, ராய் லட்சுமி, ஸ்ரேயா ரெட்டி,ஜி.வி.பிரகாஷ், நிக்கிகல்ராணி, ஆர்.ஜெ.பாலாஜி, ராதிகா சரத்குமார், பாடகி சின்மயி, நடிகை ஹேமமாலினி , ரிஷி கபூர் போன்ற பலர் தங்களது வருத்தத்தை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து முதலமைச்சர் நலம் பெற பிராத்தனை செய்வதாக தெரிவித்துள்ளனர்.