ஜல்லிக்கட்டு தமிழகத்தில் நடத்தக்கூடாது என உச்ச நீதி மன்றத்தில் தடை வாங்கியுள்ளது பீட்டா, இதனால் பல ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் பீட்டா இயக்கத்தை இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என கூறியும் , மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என கூறியும் தொடர்ந்து போராட்டம் வாயிலாக அறிவுறுத்தி வருகின்றனர் .
இந்நிலையில் பீட்டாவிற்கு ஆதரவாக ஒரு சில நடிகர், நடிகைகள் செயல் பட்டதாக ஆர்யா, விஷால், எமி ஜாக்சன், திரிஷா, கீர்த்தி சுரேஷ், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் குடும்பத்தை சேர்ந்த சிலர், தனுஷ், மலையாள நடிகர் மம்முட்டி, நடிகர்சங்க தலைவர் நாசர், இயக்குனர் ஷங்கர் போன்ற சில பிரபலங்களின் பெயர்கள் வாட்ஸ் அப் மற்றும் வலைத்தளங்களில் பரவலாக பரவியது .
ஆனால் ஆர்யா மற்றும் விஷால் இருவரும் நாங்கள் ஜல்லிக்கட்டுக்கு எதிரானவர்கள் அல்ல என கூறி நழுவி கொண்டனர் .
அதே போல திரிஷா நான், பீட்டா அமைப்பையே விட்டு விலகி விட்டதாக கூறி , அமைதியாகி உள்ளார்.
பலர் இன்றும் வாய் திறக்காமல் உள்ளனர், காரணம் தற்போது புயலாக மாறி சுழன்று வீசிக்கொண்டிருக்கும் மாணவர்கள் கூட்டம் தங்களையும் தாக்கி விடுமோ என்கிற பயத்தில், பீட்டா என்ற பேரை கேட்டதும் பலர் நான் பீட்டா ஆதரவாளர் இல்லை என பயந்து ஓடுகின்றனர்.
மேலும் நாளை நடிகர் சங்கம் நடத்தும் ஜல்லிக்கட்டுக்கான போராட்டதில் யாரெல்லாம் கலந்து கொள்ள வில்லையோ அவர்கள் ஒரு வேலை பீட்டா ஆதரவாளர்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது .
