பாலிவுட்டில் உள்ள திரைப்பிரபலங்களின் வாரிகள் அப்பா, அம்மாவிற்கே டப் கொடுக்கும் விதமாக தங்களது புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவது சகஜமான விஷயம். அவர்கள் வெளியிடவில்லை என்றாலும், பார்ட்டி, பங்ஷன் போன்ற இடங்களில் எடுக்கப்படும் போட்டோஸ் எப்படியாவது சோசியல் மீடியாவில் லீக் ஆகி, வைரலாகி விடும். ஷாரூக்கான் மகள்,  ஸ்ரீதேவின் மகள் ஜான்வி கபூர் உள்ளிட்டோர் எல்லாம் அப்படி பேமஸ் ஆனவர்கள் தான். 

பாலிவுட்டில் உச்சம் தொட்ட நடிகர் அமீர்கான், இவர் நடிகை ரீனா தத்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஜுனைத் கான், ஐரா கான் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். மற்ற நடிகர்களைப் போல் இல்லாமல் அமீர்கான், தங்களது பிள்ளைகளை மீடியா வெளிச்சம் படாமல் பொத்தி, பொத்தி வளர்த்து வருகிறார். எனவே தான் அமீர்கான் பிள்ளைகளின் பெயர் கூட செய்திகளில் வெளிவருவது அரிதிலும் அரிது. 

இந்நிலையில் அமீர்கானின் மகள் ஐரா கான், அப்பாவைப் போல சினிமாவில் பிரகாசிக்க முடிவெடுத்துள்ளார். இதற்காக கலர், கலர் உடையில் ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி தனது சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார். 

சமீபத்தில் ஐரா கான், தனது தொடை முழுவதும் தெரியும் படியாக படுகவர்ச்சி போட்டோ ஒன்றை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். ஓவர் கிளாமரில் அமீர்கான் மகள் போட்டுள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பட வாய்ப்பிற்காக நடிகைகள் தான் அரைகுறை ஆடையில் போட்டோ வெளியிடுவார்கள் என்றால், பிரபல நடிகர் அமீர்கான் மகளுமா இப்படி என நெட்டிசன்கள் அலுத்துக் கொள்கின்றனர்.