ஆண்டுதோறும் போர்ப்ஸ் இதழ் உலக அளவில் அதிகம் சம்பாதிக்கும் டாப் 100 பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த பட்டியலில் சினிமா நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஜூன் 2019 முதல் மே 2020 வரையிலான காலக்கட்டத்தில் அதிகம் சம்பாதித்த பிரபலங்களில் இந்தியாவைச் சேர்ந்த பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் மட்டுமே இடம் பிடித்துள்ளார். 

 

இதையும் படிங்க:  அம்மாடியோவ் இவ்வளவு கோடியா?.... தலைசுற்ற வைக்கும் “தலைவி” ஓடிடி விற்பனை...!

இந்த ஆண்டிற்கான 100 பிரபலங்களின் பட்டியலில் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மாடலும், தொழிலபதிபருமான கெய்லி ஜென்னர் முதலிடம் பிடித்துள்ளார். ஒரே ஆண்டில் இவர் 590 மில்லியன் டாலர் சம்பாதித்துள்ளார். இந்த பட்டியலில் இடம் பிடித்த ஒரே இந்தியர் என்ற பெருமையை அக்‌ஷய் குமார் பெற்றுள்ளார். இவரது ஆண்டு வருமானம் 48.5 மில்லியன் டாலராகும். இந்திய ரூபாயின் மதிப்பில் சுமார் 366 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: அஜித்தை விட நயன்தாரா ஸ்டார் வேல்யூ வேற லெவல்...லேடி சூப்பர் ஸ்டாரை ‘தல’ மேல் வைத்து கொண்டாடும் பிரபல நடிகர்!

கடந்த ஆண்டு 65 மில்லியன் அதாவது 490 கோடி ரூபாய் வருமானத்துடன் 33வது இடத்தில் இருந்த அக்‌ஷய் குமார், இந்த முறை 19 இடங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு 52வது இடத்தை பிடித்துள்ளார். ஆனால் அதற்கு ஆறுதல் அளிக்கும் விஷயமாக,  ஹாலிவுட் ஸ்டார்களான வில் ஸ்மித், ஜெனிபர் லோபஸ், ஜாக்கி சான், பாடகி ரைஹன்னா ஆகியோரையும் அக்‌ஷய் குமார் பின்னுக்குத் தள்ளியுள்ளார். 

இதையும் படிங்க: டீப் நெக் ஓபன்... டாப் ஆங்கிளில் கண்கூசும் அளவிற்கு கவர்ச்சி... எல்லை மீறும் சாக்‌ஷி...!

அமேசான் பிரைமில் வெளியான தி எண்ட் வெப் சீரிஸுக்காக அக்‌ஷய் குமார் சம்பளமாக வாங்கிய 75 கோடி ரூபாயும், அடுத்தண்டு வெளியாக உள்ள பெல் பாட்டம், பச்சன் பாண்டே ஆகிய படங்களுக்காக பெறப்பட்ட அட்வான்ஸ் தொகை 100 கோடி ரூபாயும் தான் அக்‌ஷய் குமாரின் வருமானத்தை உயர்ந்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.  அக்கொரோனா பிரச்சனையால் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சனைகள் தான் அக்‌ஷய் குமாரின் பின்னடைவிற்கு காரணம் என கூறப்படுகிறது. இருப்பினும் டாப் 100 பட்டியலில் இந்தியா சார்பில் அக்‌ஷய் குமார் இடம் பெற்றது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.