ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த படம் ‘காஞ்சனா’. 2011 ஆம் ஆண்டு வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் சரத்குமார் திருநங்கை வேடத்தில் நடித்திருப்பார். அதேபோல் ராகவா லாரன்ஸும் திருநங்கை வேடத்தில் தோன்று கிளைமேக்ஸ் பாடலுக்கு டான்ஸ் ஆடி அசத்தினார். இப்படம் கன்னடம், சிங்களம் மற்றும் வங்காள மொழியிலும் மொழி மாற்று செய்யப்பட்டது. இந்தியில் டப் செய்யப்பட்ட இந்த படத்தை ராகவா லாரன்ஸ் இயக்கியுள்ளார். 

 

இதையும் படிங்க: கல்யாண களைகட்டிய காஜல் அகர்வால் வீடு... வைரலாகும் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் போட்டோஸ்...!

தமிழில் நடிகர் சரத்குமார் நடித்த  'திருநங்கை' கதாபாத்திரத்தில் அக்ஷய்குமார் நடித்துள்ளார். ஹீரோயினாக கியாரா அத்வானி நடித்துள்ளார். தியேட்டர்கள் அனைத்தும் தற்போது மூடப்பட்டு இருப்பதால் பல படங்கள் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி வருகின்றன.லக்ஷ்மி பாம் படம் டிஸ்னி + ஹாட் ஸ்டார் இணையதளத்தில்  நவம்பர் 9ம் தேதி படம் வெளியாக உள்ளது.

 

இதையும் படிங்க: பாலத்தில் அமர்ந்த படி அனிகா கொடுத்த அதிர்ச்சி போஸ்... தலையில் அடித்துக்கொள்ளும் ரசிகர்கள்...!

இதற்கிடையே, இந்த படத்தின் டைட்டிலை மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது. கர்னி சேனா என்ற அமைப்பு இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களுக்கு நேற்று நோட்டீஸ் அனுப்பியது. அதில் லட்சுமி தேவியை களங்கப்படுத்துவதுபோல இதன் டைட்டில் இருப்பதாகவும் உடனடியாக டைட்டிலை மாற்ற வேண்டும் என்று கூறியிருந்தது. இதனால் ‘பாம்’ என்ற வார்த்தை மட்டும் நீக்கிய படக்குழு, இன்று புதிய தலைப்புடன் நியூ போஸ்டரை வெளியிட்டுள்ளது. படம் வெளியாக உள்ள கடைசி நேரத்தில் படக்குழு தலைப்பு மாற்றியது அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், புது போஸ்டருக்கு சோசியல் மீடியாவில் நல்ல வரவேற்பு உள்ளது.