பொங்கல் திருநாளை முன்னிட்டு கடந்த 10 ஆம் தேதி நடிகர் அஜித் நடித்த விஸ்வாசம் படம் வெளியிடப்பட்டது. அந்தப் படம் தமிழ் திரையுலக வரலாற்றில் புதிய சகாப்தம் படைத்தது. இதுவரை இல்லாத அளவு வசூல் சாதனை படைத்துள்ளது விஸ்வாசம் திரைப்படம்.

இந்தப் படம் மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல ஹிட் பாடல்களை கொடுத்து வரும்  டி.இமான்  விஸ்வாசம் படத்திற்கு இசையமைத்துள்ளார், அந்தப் படத்தில்  இடம்பெற்ற அடிச்சு தூக்கு, வேடிக்கட்டு, கண்ணான கண்ணே பாடல்கள் செம்ம ஹிட் அடித்துள்ளது.

இந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்து இமான் தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார். நான் இந்த படத்திற்காக நிறைய  டியூன் போட்டு பார்த்தேன். இயக்குனரே ஓகே சொன்னாலும் நான் மாற்றிக்கொண்டே இருந்தேன், ஒரு நாள் அஜித் சார் அனைத்து பாடல்களையும் கேட்டார்.

அன்று இரவு 10 மணிக்கு என்னை போனில் அழைத்து, "சார் எல்லா பாடல்களும் சூப்பர், கண்ணான கண்ணே என் வாழ்க்கையில் மறக்க முடியாத பாடலை கொடுத்துவிட்டீர்கள்" என்று பாராட்டினார்.

அஜித் சார் இப்படி பேசுவார் என்று நானே நினைத்து பார்க்கவில்ல  என இமான் கண் கலங்கியபடி நினைவு கூர்ந்தார்.