actor ajith name got place in oxford dictionary
தல அஜித் என்றாலே அவருக்கென இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.அஜித்துக்கு என்றைக்கும் தனி மரியாதை உண்டு ...தனி ஸ்டைல் உண்டு.
பொதுவாகவே அனைவருக்கும் ஏதோ ஒரு விதத்தில் நல்லது செய்து வருவார். சமீபத்தில் கூட ஒரு மருத்துவர் மூலமாக பலருக்கும் கண் அறுவை சிகிச்சைக்கு உதவி செய்து அவர்களுக்கு பார்வைவர செய்தார்

இது மட்டுமா சென்னை தண்ணீரில் தத்தளித்த போது,அவருடைய வீட்டை பொதுமக்கள் பயன்படுத்த கொடுத்துவிட்டு அவரு வேறு இடத்தில குடும்பத்தோட தங்கினார்
இன்னும் சொல்லப் போனால், அஜித் ஒரு சிறந்த நடிகர் என்பதை விட, சிறந்த மனிதர் என்ற பட்டதை பெற்று விட்டார் அதனுடைய உச்சம் தான் தற்போது ஆக்ஸ்போர்ட் டிக்ஷ்னரியில் கூட அவர் பெயர் இடம் பெற காரணமாக அமைந்துள்ளது
அண்மையில் பல்வேறு புதிய வார்த்தைகள் ஆக்ஸ்போர்ட் டிக்ஷ்னரியில் சேர்க்கப்பட்டது. அதில் இடம்பெற்ற ஒரு தமிழ் வார்த்தை தான் ‘அண்ணா’.

அண்ணா வார்த்தைக்கு மூத்த சகோதரர் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதோடு, என் அண்ணனை 8 வருடங்கள் கழித்து பார்த்தது மிகவும் மகிழ்ச்சி அதுவும் அவரது திருமணத்தின்போது என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடேயே அஜித் என்ற பெயர் எப்படி ஆக்ஸ்போர்ட் டிக்ஷ்னரியில் இடம் பெற்றது தெரியுமா ?
அஜித் பெயர் :
விவேகம் படத்திற்காக விவேக் ஓபராய் அளித்த பேட்டியில் ”I got to act with Ajith anna” என கூறியிருந்தார். அந்த வாசகமும் உதாரணமாக இடம்பெற்றுள்ளது.
https://en.oxforddictionaries.com/definition/anna
இதன் மூலம் ஆக்ஸ்போர்ட் டிஷ்னரியில் ஒரு வார்த்தைக்கு அஜித்தை உதாரணமாக கூறியது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
மக்கள் மனதில் மட்டும் இடம் பிடித்தவர் அல்ல அஜித்..... ஆக்ஸ்போர்ட் டிக்ஷ்னரியில் கூட இடம் பிடிக்கும் அளவிற்கு மக்கள் மனதில் நிலைத்து நின்ற சிறந்த மனிதர் என்பதற்கு இதை விட வேறு ஒரு சான்றும் தேவைபடாது.
தல என்றும் தல தான் .... என்பதை மேலும் மேலும் நிரூபணம் ஆகிறது என அவருடைய ரசிகர்கள் மட்டுமல்லாமல் பொதுவாகவே அனைவரும் அவர் மீது தனி மரியாதையும் மதிப்பும் வைக்கும் அளவிற்கு மேன்மேலும் உயர்ந்து வருகிறார் தல அஜித் என்றால் அதில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது
