தல அஜித் திரையுலகில் வெற்றிகரமாக 29 ஆண்டுகளை நிறைவு செய்து 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில், ரசிகர்களுக்காக அறிக்கை மூலம் தன்னுடைய கருத்தை வெளியிட்டுள்ளார். 

தல அஜித் திரையுலகில் வெற்றிகரமாக 29 ஆண்டுகளை நிறைவு செய்து 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில், ரசிகர்களுக்காக அறிக்கை மூலம் தன்னுடைய கருத்தை வெளியிட்டுள்ளார்.

அஜித் எடுத்ததுமே திரையுலகில் ஹீரோவாக அறிமுகம் கொடுக்க வில்லை. கடந்த 1990 ஆம் ஆண்டு, இயக்குனர் செண்பக ராமன் என்பவர் இயக்கிய, 'என் வீடு என் கணவர்' என்கிற படத்தில் கியூட் ஸ்கூல் பாய்யாக அறிமுகமானார். இந்த படத்தில் ஹீரோவாக நடிகர் சுரேஷ் மற்றும் ஹீரோயினாக நதியா ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தை தொடர்ந்து தான் 1993 ஆம் ஆண்டு, 'அமராவதி' படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு அஜித்துக்கு கிடைத்தது. இயக்குனர் செல்வா இயக்கத்தில் வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கவே அஜித்துக்கு அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்புகளும் குவிந்தது.

இந்த 29 வருடங்களில், பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார் தல. குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான, பவித்ரா, ஆசை, காதல் கோட்டை, காதல் மன்னன், அவள் வருவாளா, அமர்க்களம் , தீனா, சிட்டிசன், பில்லா 2 , வீரம், வேதாளம், நேர்கொண்ட பார்வையை போன்ற படங்கள் ரசிகர்கள் மனதில் இருந்து எப்போதுமே நீங்காத இடம் பிடித்தவை. 

இந்த படங்களின் வரிசையில், அஜித் இரண்டாவது முறையாக இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடித்து வரும் அவரது 60 ஆவது படமான வலிமையையும் இணையும் என்கிற எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. அஜித் திரையுலகில் நுழைந்து 29 ஆண்டுகள் நிறைவடைந்து 30 வருடம் துவங்குவதையும் கமான் டிபி வெளியிட்டு... அஜித் ரசிகர்கள் தாறுமாறாக கொண்டாடிய நிலையில், தற்போது அஜித் தரப்பில் இருந்து அவரது பிஆர்ஓ, தல கூறிய வார்த்தைகளை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது... "திரையுலகைள 30 ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித் வெளியிட்டுள்ள செய்தி... "ரசிகர்களின் அன்பையும், விமர்சகர்களின் விமர்சனத்தையும், நடுநிலையாளர்களின் நியாயமான பார்வையையும் மனதார ஏற்றுக்கொள்கிறேன்" வாழ... வாழ விடு! நிபந்தனையற்ற அன்பு எப்போதும் !! அஜித்குமார் என தெரிவித்துள்ளார்.

Scroll to load tweet…