actor ajith escaped from malasia programme
நடிகர் சங்க கட்டிடம் கட்ட நிதி திரட்ட மலேசியாவில் நடைபெற்று வரும் கலை நிகழ்ச்சியில்,கமல் ரஜினி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் கலந்துக் கொண்டு உள்ளனர்.
ஆனால்,விஜய் சந்தானம்,ஜெய்,அஜித் உள்ளிட்டநடிகர்கள் விழாவிற்கு வராமல் எஸ்கேப் ஆகி உள்ளனர்.
மேலும் இந்த விழாவிற்கு சிம்பு மற்றும் தனுஷ் கூட செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விழாவிற்கு வருகை தர மறுத்த விஜய்,முறையான காரணத்தை சொல்லி வேறு விதத்தில் அவருடைய பங்களிப்பு இருக்கும் என தெரிவித்து உள்ளார்.
மற்ற நடிகர்கள் எந்த அறிவிப்பு தெரிவிக்காமல் விழாவிற்கு செல்லவும் இல்லை. இது குறித்து தெரிவித்த நடிகர் சங்க நிர்வாகி ஒருவர்,அஜித் சாரை தொடர்பு கொள்ளக்கூட முடியவில்லை...அவர் அங்கு சென்று உள்ளார் .இங்கு சென்று உள்ளார்...என்றே சொல்லி சொல்லி கடைசி வரை வராமல் போய் விட்டார் என பலரும் புலம்ப தொடங்கி உள்ளனர் என குறிப்பிட்டு உள்ளார்.
