Abhishek Bachchan : தன் மகளை கேலி செய்தால் சும்மா இருக்க மாட்டேன் என நடிகர் அபிஷேக் பச்சன் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

பிரபலமான பாலிவுட் நட்சத்திர ஜோடிகள் அபிஷேக் பச்சன், நடிகை ஐஸ்வர்யாராய் தம்பதிகளுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். கடந்த மாதம் ஆராத்யாவின் 10வது பிறந்தநாளை மாலத்தீவில் குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். 

இது குறித்தனா புகைப்படங்களை அபிஷேக் பச்சன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வாழ்த்து கூறியிருந்தார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ஆராத்யாவுக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

அதேவேளையில் அபிஷேக் பச்சன் மகள் ஆராத்யா புகைப்படத்தை பார்த்த சில விஷ கிருமிகள் மோசமாக விமரிசித்துள்ளனர். பின்னர் இந்த கமெண்டுகளை படித்த அபிஷேக் செம டென்ஷன் ஆகியுள்ளார்.

View post on Instagram

இதுகுறித்து அபிஷேக் பச்சன் கூறியிருப்பதாவது: சினிமாவில் நான் பிரபலமாக இருப்பதால், என்னைப் பற்றி வரும் விமர்சனங்களை எதிர்கொண்டாக வேண்டும். ஆனால், என் மகளை கேலி செய்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆராத்யாவை கேலி செய்பவர்கள், தைரியம் இருந்தால் எனக்கு நேராக வந்து பேசட்டும். என்று கூறியுள்ளார்.ஒரு தந்தையின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும் என்று இப்போது அபிஷேக் பச்சனுக்கு ஆதரவாக கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.