பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானவர் இலங்கை செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா. பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருந்த பிரபலங்களில் ரசிகர்களையும், மக்களையும் அதிகப்படியாக கவர்ந்த பிரபலங்களில் இருவரும் ஒருவர்.

குறிப்பாக பிக்பாஸ் சீசன் 3  நிகழ்ச்சியில்,  இவருக்கு தான் முதல் முதலில் ஆர்மி ஆரம்பிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்: மனைவியுடன் பிறந்தநாள் கொண்டாடும் பிக்பாஸ் மஹத்! குதூகலத்தோடு எடுத்து கொண்ட புகைப்பட தொகுப்பு!
 

இந்நிலையில், தற்போது லாஸ்லியாவிற்கு தமிழ் பட வாய்ப்புகள் கதவை தட்ட துவங்கியுள்ளது. அதன் படி நடிகர் ஆரி நடிக்கும் படம் ஒன்றிலும், சி.எஸ்.கே அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நாயகனாக நடிக்க உள்ள, 'Friednship ' என்கிற படத்திலும் நடிக்க உள்ளார்.

இந்த படம் குறித்து அதிகார பூர்வ தகவல் சமீபத்தில் வெளியான நிலையில், தற்போது இந்த படத்தில் தமிழ் சினிமாவில் பல ஆக்க்ஷன் படங்களில் நடித்து, அதிரடி காட்டிய நாயகன் 'ஆக்ஷன் கிங் அர்ஜுன்' இணைத்துள்ளார் என்பதை போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்: இரண்டாவது திருமணத்திற்கு தயாராகிவிட்டேன்! காதலரை கரம்பிடிக்க போகும் அமலாபால்!
 

இந்த படத்தை ஜான் பால் ராஜ் & ஷாம் சூர்யா ஆகியோர் இயக்குகின்றனர். ஜெ.பி.ஆர் & ஸ்டாலின் இந்த படத்தை தயாரிக்கவுள்ளார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.