action king arjun act in visuvasam movie
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தல அஜித் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜூன் நடித்து 2011ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'மங்காத்தா'. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷாவும் அர்ஜூனுக்கு ஜோடியாக அண்ட்ரியாவும் நடித்திருந்தனர்.
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் மீண்டும் 'மங்காத்தா 2' வில் இதே குழு இணையவுள்ளதாக கூட பல வதந்திகள் பரவியது
.
விசுவாசம் படத்தில் அர்ஜூன் :
இந்நிலையில் தல நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கவுள்ள 'விசுவாசம்' படத்தில் அர்ஜூன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துக்கொண்டிருக்கிறது. இந்த செய்தி உண்மையானால் மீண்டும் இவர்கள் இருவரையும் ஒரே திரைப்படத்தில் ரசிகர்கள் பார்க்கலாம்.
மேலும் விசுவாசம் படத்தில் அர்ஜூன் அஜித்துக்கு நிகரான வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறாரா? என்பது குறித்து இன்னும் படக்குழுவினரிடம் இருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
விசுவாசம் படத்தில் நயன்தாராவை தொடர்ந்து அர்ஜூன் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
