அர்ஜூன் நடிப்பில் வெளியான "மதராசி" படம் மூலம் அறிமுகமாகி, ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த "முனி" படம் மூலம் பிரபலமானவர் வேதிகா. இதையடுத்து "பரதேசி", "சக்கர கட்டி" ஆகிய படங்களில் நடித்த வேதிகாவிற்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு காஞ்சனா 3 படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் ஓவர் கவர்ச்சி காட்டி நடத்தியிருந்தார். தற்போது பெரிதாக படவாய்ப்புகள் இல்லாத நிலையில் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி, அந்தப் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவேற்றி வருகிறார்.

சமீபத்தில் மும்பையில் ஃபிலிம்பேர் கிளாமர் அண்ட் ஸ்டைல் அவர்ட்ஸ் 2019 நிகழ்ச்சி நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் சிவப்பு நிற பேக்லெஸ் உடையில் பங்கேற்ற வேதிகா அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அந்த விழாவில் போட்டோகிராபர்களுக்கு விதவிதமாக போஸ் கொடுத்த வேதிகா, அதனை தனது சோசியல் மீடியா பக்கங்களிலும் பதிவிட்டார். அவ்வளவு தான் உடனடியாக பற்றிக் கொண்டது வைரல் தீ. ஓவர் கிளாமரில் ஹாட் அண்ட் க்யூட் வேதிகாவைப் பார்த்து அசத்து போன ரசிகர்கள் #Vedhika என்ற ஹேஷ்டேக்குடன் அந்தப் புகைப்படங்களை ஷேர் செய்ய ஆரம்பித்தனர். 

 

சோசியல் மீடியாவில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்ட வேதிகாவின் ஹாட் போட்டோஸ், டுவிட்டர் ட்ரெண்டிங்கிலும் இடம் பெற்றது. மேலும் வெங்காய விலை குறித்த ஹேஷ்டேக்குகளையும் பின்னுத்தள்ளியுள்ளது. தமிழில் பெரிதாக கவர்ச்சி காட்டாத வேதிகா, பாலிவுட் விருது வழங்கும் விழாவிற்கு இவ்வளவு கவர்ச்சியாக சென்றது. தமிழ் ரசிகர்களை லேசாக கடுப்பேற்றினாலும், டுவிட்டர் ட்ரெண்டிங்கில் தெறிக்கவிட்டுள்ளனர்.