கடந்த 2001 புதிய நீதி என்கிற கட்சியை துவங்கியவர் அந்த கட்சியின்  தலைவர் ஏ.சி.ஷண்முகம். மேலும் டாக்டர் எம்ஜிஆர் கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் என்கிற நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் உள்ளார்.

சமீபத்தில் நடந்த நாடாளு மன்ற தேர்தலில், அதிமுக வேட்பாளராக வேலூர் மாவட்டத்தில் போட்டியிட இருந்த இவர், வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதால், போட்டியிடமுடியாமல் போனது.

இந்நிலையில் ஏ.சி.சண்முகத்தின் மகன் ஏ.சி.எஸ். அருண்குமாரும் , ஏ.சி.சண்முகத்தின் சகோதரரும், இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவருடைய வீட்டில் சந்தித்து ஆசி பெற்றனர். ஏ.சி.எஸ் அருணின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது.