achievement on re-twitt in Twitter fans give proud to Ajith

விவேகம் பற்றி தகவல்கள் கசிந்தால் போதும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் எதையாவது டிரெண்டாக்கிவிட்டு சாதனை படைத்து அஜித்துக்கு பெருமை சேர்க்கின்றனர்.

இந்த வரிசையில் விவேகம் படத்தின் பர்ஸ்ட் லுக் மேலும் ஒரு சாதனை படைக்க செய்துள்ளனர்.

விவேகம் படத்தில் அஜித்தின் பர்ஸ்லுக் வந்து பல மாதங்கள் ஆகிவிட்டது. இது அஜித் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

டிவிட்டரில் அதிகம் பேர் ரீ-டுவிட் செய்த ‘பர்ஸ்ட் லுக்’ என விவேகம் ஏற்கனவே சாதனை படைத்தது.

தற்போது இந்த பர்ஸ்ட் லுக்கை ரீ-டுவிட் செய்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியது. இதன் மூலம் முதல் முறையாக 30 ஆயிரம் ரீ-டுவிட்டுகளைத் தாண்டிய பர்ஸ்ட் லுக் விவேகம் என்ற பெருமையையும் சொந்தமாக்கியுள்ளது.

இது அஜித் ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தியுள்ளது. இன்னும் என்ன பண்ண காத்திருக்காங்களோ!