போலிஸ் அனுமதி பெறாமல் நடத்தப்பட்ட படப்பிடிப்பு ஒன்றில் நடந்த விபத்தில் ஒரு தாயும் அவரது 5 வயது பெண் குழந்தையும் சிலிண்டர் வெடித்து சிதறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இன்னொரு மூன்று வயது குழந்தை உயிருக்கு ஊசலாடுகிறது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

வி.சமுத்ரா இயக்கத்தில் சிரஞ்சீவி சார்ஜா, சேத்தன் நடிப்பில் ‘ரணம்’ என்ற பெயரில் கன்னட மொழிப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் சி.பி.ஐ. அதிகாரி வேடத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார்.இந்த படத்தின் சண்டைக் காட்சிக்கான படப்பிடிப்பு பெங்களூரு அருகேயுள்ள பாகலூரு பகுதியில் இன்று நடைபெற்றது. காட்சி அமைப்பின்படி தேர்(கார்) மோதி தீபிடிப்பது போன்ற அமைப்புகள் செய்யப்பட்டபோது அங்கிருந்த ஒரு எரிவாயு சிலிண்டர் திடீரென்று வெடித்து சிதறியது.

இந்த விபத்தில் படப்பிடிப்பை பார்க்க வந்திருந்த சுமைரா(28), ஆயிரா(5) ஆகிய இரு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். காயத்துடன் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் நிலையில் இவ்விபத்து தொடர்பாக பாகலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இப்படப்பிற்கு முறைப்படி போலீஸார் அனுமதி பெறவில்லை என்றும் தகவல் அறிந்து ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போலீஸார் விரைந்து வந்தபோது படப்பிடிப்பு குழுவைச் சேர்ந்த அனைவரும் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.