நடிகை ஐஸ்வர்யா ராய், பாலிவுட் சூப்பர் ஸ்டார் மகனும் பிரபல நடிகருமான அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டவர். பாலிவுட் திரையுலகில் நட்சத்திர ஜோடிகளாக வளம் வரும் இவர்களுக்கு ஆராத்யா என்கிற மகளும் உள்ளார். 

இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சன் மீது சந்தேகம் ஏற்பட்டு அவருடைய கைபேசியை ரகசியமாக சோதனையிட்டதாகவும் இதனால் வெடித்த பிரச்சனை காரணமாக இருவரும் ஒரே வீட்டிலேயே பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் அண்மையில் அபிஷேக் பச்சன் பேட்டி கொடுத்துள்ளார். அப்போது பத்திரிகையாளர்கள் ஐஸ்வர்யா ராய் மிகவும் அழகாக இருக்கும் காரணத்தால் தான் நீங்கள் அவரை காதலித்து திருமணம் செய்ததாக கூறப்படுகிறதே ? என்று கேள்வி எழுப்பினர்.

இந்த கேள்விக்கு அபிஷேக் பதிலளிக்கையில் 'ஐஸ்வர்யா மேக்கப் இல்லாமல் கூட மிகவும் அழகாக தெரிபவர் தான்... ஆனால் இந்த காரணத்திற்காக அவரை நான் காதலிக்க வில்லை. அதே போல் அவர் முன்னணி நடிகை என்பதற்காகவும் திருமணம் செய்துக்கொள்ள நினைக்க வில்லை. அவருடைய நல்ல குணத்திற்காக தான் அவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டேன் என கூறினார்.

தற்போது இவர்களுக்குள் வெடித்த பிரச்சனை உண்மையா என்று பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்ப அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் காரில் ஏறி சென்றதாக கூறப்படுகிறது.