பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில், ஷெரின், அபிராமி, முகேன், தர்ஷன், பார்த்திமா பாபு, சாக்ஷி, லாஸ்லியா, கவின், உள்ளிட்ட மொத்தம் 16  பிரபாலங்கள் கலந்து கொண்டு விளையாடினர்.

இவர்களில் மிகவும் அன்பானவராகவும், குழந்தை தனமான ஒருவராகவும் அனைவராலும் அறியப்பட்டவர் என்றால் அது தர்ஷன் தான். எனவே சேரன் கூட முதல் வாரத்தில், லாஸ்லியா மற்றும் தர்ஷன் இருவரும் இதனை போட்டியாக எடுத்து கொள்ளாமல் விளையாடி வருகிறார்கள், அதனால் அவர்களுடைய பெயரை நாமினேட் செய்வதாக கூறினார்.

பிக்பாஸ் வீட்டை விட்டு முதலில் வெளியே சென்ற, பாத்திமா பாபு கூட, தர்ஷன் தான் வெற்றி பெறவேண்டும் என வாழ்த்தி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் பிக்பாஸ் வீட்டில் வெற்றி பெறுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருந்தும், மக்களிடம் குறைவான ஓட்டுகளை பெற்று வெளியேறினார் தர்ஷன். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்  சில படங்களில் கமிட் ஆகி நடிக்க துவங்கியுள்ளார்.

இந்த நேரத்தில், தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி... பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன் தன்னை திருமணம் செய்து கொள்ள நிச்சயதார்த்தம் செய்து கொண்டு, வெளியே வந்ததும், தர்ஷன் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுப்பதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதை தொடர்ந்து , பிரபல ஊடகம் ஒன்றிற்கு இவர் கொடுத்துள்ள பேட்டியில், மலேசியாவில் நடந்த கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தர்ஷனுடன் தான் சென்ற போது அபிராமி, என்னை தர்ஷனுடன் பேச விட வில்லை என்றும், தர்ஷனை தொந்தரவு செய்யாமல் விலகிவிடு என்பது போல் பேசினார்.

மேலும், தனக்கு மனநலம் சரி இல்லை என்றும்... நல்ல மருத்துவரை பார்க்கும் படி கூறியது தன்னை மிகவும் வேதனை படுத்தியதாக கூறி குமுறியுள்ளார் சனம் ஷெட்டி.