Asianet News TamilAsianet News Tamil

’சின்ன வீடுகளை நம்பி மனைவிகளை கைவிட்டுடாதீங்க’...தயாரிப்பாளர்களுக்கு தியேட்டர் அதிபர் வேண்டுகோள்...

அறிவியல் முன்னேற்றம் மற்றும் பெருகி வரும் இணையத்தள சேவைகள் அத்தனையும் சின்ன வீடுகள் போன்றவை. ஆனால் எங்கள் தியேட்டர்கள் உங்களுக்கு விசுவாசமான மனைவிகள் போல. ஆக சின்ன வீடுகளை நம்பி மனைவிகளைக் கைவிட்டுவிடாதீர்கள்’என்று தயாரிப்பாளர்களுக்கு அபிராமி தியேட்டர் அதிபர் ராமநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 

abirami ramanathan interview
Author
Chennai, First Published Jul 5, 2019, 10:39 AM IST

அறிவியல் முன்னேற்றம் மற்றும் பெருகி வரும் இணையத்தள சேவைகள் அத்தனையும் சின்ன வீடுகள் போன்றவை. ஆனால் எங்கள் தியேட்டர்கள் உங்களுக்கு விசுவாசமான மனைவிகள் போல. ஆக சின்ன வீடுகளை நம்பி மனைவிகளைக் கைவிட்டுவிடாதீர்கள்’என்று தயாரிப்பாளர்களுக்கு அபிராமி தியேட்டர் அதிபர் ராமநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.abirami ramanathan interview
 
 திரைப்படங்கள் வெளியான சில நாட்களில் அல்லது சில வாரங்களில் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறத். சில நூறுகள் கட்டணம் செலுத்திவிட்டு படம் பார்க்கும் வசதிகளும், இத்தகைய சேவைகளை வழங்கும் நிறுவனங்களும் அதிகரித்து வருவதால், தற்போது தியேட்டருக்கு செல்பவரின் கூட்டமும் குறையத் தொடங்கியுள்ளது.இந்த நிலையில், நெட்பிளிக்ஸ், அமேசான் உள்ளிட்ட டிஜிட்டல் நிறுவனங்களுக்கு திரைப்படங்களை கொடுப்பதில் சில கட்டுப்பாடுகளை தயாரிப்பாளர்கள் கடைபிடிக்க வேண்டும், என்று சென்னை அபிராமி திரையரங்கின் உரிமையாளரும், திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவருமான அபிராமி ராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

 சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ‘பெளவ் பெளவ்’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்டு பேசிய அபிராமி ராமநாதன், “முன்பெல்லாம் தொலைக்காட்சிகள் சினிமா துறைக்கு சவாலாக அமைந்தது. தற்போது செல்போன்கள் அதைவிடவும் சவாலாக இருக்கிறது. ஒரு திரைப்படம் வெளியான சில நாட்களிலேயே நெட்பிளிக்ஸ், அமேசான் உள்ளிட்ட டிஜிட்டல் நிறுவனங்களுக்கு விற்கப்பட்டு விடுவதால், தியேட்டருக்கு வரும் கூட்டம் குறைந்துவிட்டது. டிஜிட்டல் நிறுவனங்களுக்கு படங்களை விற்க வேண்டாம், என்று சொல்லவில்லை. படம் வெளியாகி மூன்று மாதத்திற்குப் பிறகு கொடுங்கள், உடனே கொடுப்பதால் திரையரங்கங்கள் பாதிக்கப்படுகிறது.abirami ramanathan interview

 பல கோடிகளை செலவிட்டு நீங்கள் எடுக்கும் பிரம்மாண்ட படங்களை சிறிய திரையில் பார்த்தால் மக்கள் எப்படி ரசிப்பார்கள், திரையரங்கில் பார்த்தால் தான் ரசிப்பார்கள். அது தான் அந்த படத்திற்கும் கெளரவம். எங்களாலும் தொழில் செய்ய முடியும். இன்று சினிமா வளர்ந்ததற்கு காரணமே திரையரங்கங்கள் தான், அப்படி இருக்க அந்த திரையரங்குகளை தயாரிப்பாளர்கள் தற்போது மறந்துவிட்டு டிஜிட்டல் நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது வருத்தமளிக்கிறது.திரையரங்கங்கள் உங்களது மனைவி போல, டிஜிட்டல் நிறுவனங்கள் என்பது வப்பாட்டி போல.  மனைவி தான் எப்போதும் முக்கியம். அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். எங்களை கைவிட்டு விடாதீர்கள்.” என்று  தயாரிப்பாளர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios