Asianet News TamilAsianet News Tamil

அசைவம் சாப்பிடுறவங்க இனிமே அபிராமி மெகாமால் பக்கமே போகாதீங்க பாஸ்...

ஏற்கனவே ஆயிரம் சீட்டுகள் கொண்ட அபிராமி மெகாமால் தியேட்டர்களில் புதுப்படம் ரிலீஸாகும் முதல் நாட்கள் தவிர பெரும்பாலான நாட்களில் தியேட்டரில் ஈ ஓட்டுகிறார்கள்.

abirami megamal going tobe demolished
Author
Chennai, First Published Dec 30, 2018, 3:12 PM IST

வரும் ஜனவரி 31ம் தேதியோடு அபிராமி மெகாமால் முற்றிலுமாக இடிக்கப்பட்டு 17 மாடிகள் கொண்ட குடியிருப்புகள் கட்டப்பட இருப்பதாகவும் அதில் சைவ உணவு சாப்பிடுகிற பிராமணர் போன்றவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும் என்று அந்நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே ஆயிரம் சீட்டுகள் கொண்ட அபிராமி மெகாமால் தியேட்டர்களில் புதுப்படம் ரிலீஸாகும் முதல் நாட்கள் தவிர பெரும்பாலான நாட்களில் தியேட்டரில் ஈ ஓட்டுகிறார்கள்.abirami megamal going tobe demolished

இதனால் தியேட்டர் தொழிலோடு சேர்த்து அடுக்குமாடி குடியிருப்புகளையும் கட்டும் முடிவையும் அபிராமி நிர்வாகம் எடுத்துள்ளது. அந்த 17 மாடிகளில் முதல் மூன்று மாடிகளை தியேட்டருக்கும் மீதி 14 மாடிகளை குடியிருப்புக்கும் விட முடிவு செய்துள்ள நிலையில், ‘இப்பல்லாம் யாரு சாதி பாக்குறாங்க’ என்று கேட்கவேண்டிய நிலையில், 14 மாடிகளிலும் சைவ உணவுக்காரர்களுக்கே முன்னுரிமை என்று அந்நிர்வாகம் அறிக்கையாகவே வெளியிட்டுள்ளது.abirami megamal going tobe demolished

17 மாடி கட்ட  முறையான அனுமதி இருக்கிறதா என்கிற கேள்வி ஒருபுறமிருக்க, திருச்சியில் மாநாடு நடத்திய பெரியார் பேரன்களுக்கு சவால் விடும் வகையில் இந்த சைவ முன்னுரிமை இருப்பதாகவே தோன்றுகிறது. அப்படியானால் இனிமேல் அபிராமி மெகாமாலுக்கு சைவம் சாப்பிடுகிறவர்கள் மட்டுமே படம் பார்க்கவந்தால் போதுமா?

Follow Us:
Download App:
  • android
  • ios